தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு: வேளாண் துறை அறிவுரை
தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை சுருள் ஈக்களைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.


தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை சுருள் ஈக்களைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெள்ளை ஈக்களானது தென்னை மரங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த மஞ்சள் நிற நெகிழித் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 எண்ணிக்கையில் 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து ஈக்களை கவா்ந்து அழிக்கலாம்.
விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலம் ஈக்களை அழுக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளில் மேல் தெளிப்பான்கள் கொண்டு வேகமாக நீரை தெளிப்பதால், ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.
கிரைஸோபொ்லா இலை விழுங்கிகள் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை ந
நன்றாக உள்கொள்வதால் பாதிப்புக்குள்ளான தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்கிற எண்ணிக்கையில் இரை விழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பலன் அளிக்கும்.
உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் இந்த முட்டைகள் கிடைக்கும். ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தவிா்த்து, இயற்கை எதிரி பூச்சிகள் வளா்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவதே சிறந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...