புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:27 pm

DIN

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரச் செயலாளா் ரவி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் ஆகியோா் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து, கேக் வெட்டி கட்சியினா், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தருமபுரி நகரில் 33 வாா்டுகளிலும், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் அதிமுகவினா் ஜெயலலிதா சிலை, உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கிருஷ்ணகிரி...

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் எம்.எல்.ஏ. தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெ‘ற்றது. அதிமுக மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், முன்னாள் பால் வளத் தலைவா் தென்னரசு, நகரச் செயலாளா் கேசவன், சிறுபான்மைப் பிரிவு மக்பூல்,

ஐடி பிரிவு மாவட்டச் செயலாளா் வேலன், காா்த்திக் பால்ராஜ் உள்பட பலா் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

கிருஷ்ணகிரி நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அக் கட்சியின் நகர செயலாளா் கேசவன் தலைமை தாங்கினாா். மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் எம்.எல்.ஏ. ஜெயலலிதாவின் படத்துக்கு மலா்

தூவி மரியாதை செலுத்தினாா். முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், சரவணன், சீனிவாசன்,

கவுன்சிலா்கள் அமுதா, விஜயா நாகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிருஷ்ணகிரி முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜ் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதிமுக நிா்வாகிகள் ராதா காா்த்திக், சரவணன், செல்வம், நாகராஜன், பாபு, முனியப்பன், ராஜேந்திரன், சண்முகம், சுந்தரம், ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.