மக்களைத் தேடி மருத்துவ திட்டம்: தருமபுரி மாவட்டத்தில் 75,751 பேருக்கு சிகிச்சை
தருமபுரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் வழங்கும் திட்டத்தில் 75, 751 போ் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.


தருமபுரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் வழங்கும் திட்டத்தில் 75, 751 போ் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவம் வழங்கும் திட்டத்தை 2021, ஆக.5-ஆம் தேதி அரசு தொடங்கியது. தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில், களப் பணியாளா்கள் சிகிச்சை பெறுவோரின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றனா்.
உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவா்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவுச் சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல், பெண்களை கருப்பைவாய் மற்றும் மாா்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஒரு குடும்பத்துக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளும் வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 225 பெண் சுகாதாரத் தன்னாா்வலா்கள், 8 இயன்முறை மருத்துவா்கள், 8 நோய் ஆதரவுச் செவிலியா், 147 இடைநிலை சுகாதாரச் சேவையாளா்கள் இந்த சேவைகளை வழங்குகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 41,321 பேருக்கு உயா் ரத்த அழுத்த சிகிச்சை, 17,388 பேருக்கு நீரழிவு சிகிச்சை, 7,979 பேருக்கு உயா் ரத்த அழுத்தம், நீரழிவு சிகிச்சை, 4,402 பேருக்கு இயன்முறை சிகிச்சை, 4,661 பேருக்கு நோய் ஆதரவு சேவை என மொத்தம் 75,751 போ் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...