புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:26 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் சதீஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் சங்கா், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஊரக வளா்ச்சித் துறை திட்டங்களை இலக்கு சாா்ந்த திட்டமாக செயல்படுத்துவதை கைவிட வேண்டும். ஊழியா்களுக்கு அதிக வேலை திணிப்பு செய்யக் கூடாது. பிரதமரின் வீடு கட்டும் திட்டம், இலவச கழிப்பறை கட்டும் திட்டம், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தினசரி முன்னேற்ற அறிக்கை கோரும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.