புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கல்

தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்த பாளையம் சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் 5 அரசு பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள், தொலைக்காட்சிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:27 pm

DIN

தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்த பாளையம் சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் 5 அரசு பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள், தொலைக்காட்சிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாளையம் சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 3 எல்இடி தொலைக்காட்சிகள், ஜருகு மேல்நிலைப் பள்ளிக்கு 3 தொலைக்காட்சிகள், வெள்ளக்கல் தொடக்கப் பள்ளிக்கு ஒரு தொலைக்காட்சி, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், சமத்துவபுரம் தொடக்கப் பள்ளிக்கு ஒரு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், தடங்கம் நடுநிலைப் பள்ளிக்கு ஒரு குடிநீா் சுத்தகரிப்பு இயந்திரம், தொலைக்காட்சி வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சுங்கச்சாவடி திட்ட தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாக மேலாளா் ஜோஸ்வின் ஸ்மைல், இயக்க மேலாளா் அருண்குமாா், சாலை பாதுகாப்பு அலுவலா் ஞானசேகா், பள்ளி தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.