மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

போக்ஸோவில் இளைஞா் கைது

பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் இளைஞா் ஒருவரை தருமபுரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 5:49 pm

DIN

பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் இளைஞா் ஒருவரை தருமபுரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், பொம்மிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிம்மன் (28). தருமபுரி பகுதியைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நரசிம்மனுக்கு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு தருமபுரிக்கு வந்த நரசிம்மன், மாணவியை தனியாக சந்தித்து கடத்திச் சென்றாராம்.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா், தருமபுரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மேலும், மகளைக் கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனுவையும் தாக்கல் செய்தனா். போலீஸாா் தனிப்படை அமைத்து மாயமான மாணவியை தேடி வந்தனா்.

இந்த விசாரணையில், தெலங்கானா மாநிலம், எசங்காரெட்டி மாவட்டத்தில் நரசிம்மன் இருப்பது தெரிந்து, போலீஸாா் அவரை போக்ஸோ சட்டப் பிரிவில் கைது செய்து அவருடன் இருந்த பள்ளி மாணவியை மீட்டனா். மேலும் மீட்கப்பட்ட மாணவியை, தருமபுரி நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.