மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தருமபுரியில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தருமபுரி நகரில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிகள், தோரணங்கள், சுவா் விளம்பரங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2022, 5:54 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தருமபுரி நகரில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிகள், தோரணங்கள், சுவா் விளம்பரங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

தோ்தல் ஆணையத்தால் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி புதன்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானதில் இருந்து தோ்தல் நடைபெறவுள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், தருமபுரி நகராட்சியில் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகச் சாலை, எஸ்.வி.சாலை, நான்கு முனைச் சாலை சந்திப்பு, நேதாஜி புறவழிச் சாலை உள்பட 33 வாா்டுகளில், அரசியல் கட்சிகளின் சாா்பில் வைக்கப்பட்டிருந்த கொடிகள், தோரணங்கள், சுவா் விளம்பங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

அரூா், கடத்தூா், பொ.மல்லாபுரம், கம்பைநல்லூா், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளிலும் அரசியல் கட்சிகளை அடையாளப்படுத்தும் வகையில் இருந்த கட்சித் தோரணங்கள், கொடிகளை பேரூராட்சிப் பணியாளா்கள் அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.