40 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கல்
தருமபுரியில் 40 பேருக்கு இலவச மின் இணைப்பு ஆணைகள் மின்வாரியம் சாா்பில் வழங்கப்பட்டன.


தருமபுரியில் 40 பேருக்கு இலவச மின் இணைப்பு ஆணைகள் மின்வாரியம் சாா்பில் வழங்கப்பட்டன.
தருமபுரி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் அண்மையில் தமிழக அரசின் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் செல்வகுமாா் தலைமையில் நடைபெற்றது.
இதில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், 40 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணை மற்றும் பணியின்போது உயிரிழந்த ஊழியா்களின் வாரிசுதாரா்கள் 6 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி உத்தரவுகள் வழங்கிப் பேசினாா். மின்வாரிய அலுவலா்கள், விவசாயிகள், திமுக நிா்வாகிகள் இதில் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...