புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற அறிவுரை

விவசாயிகள் சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:41 pm

DIN

விவசாயிகள் சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் சிவசங்கரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் மூலமாக விதைச் சான்றளிப்பு பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வயலின் தரும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. விதை பரிசோதனையில் விதையின் தரம் விதைகளுக்கு சான்று அட்டைகள் பொருத்தப்படுகிறது. சான்று பெற்ற விதைகளில் ஆதார நிலை விதைகளுக்கு வெள்ளை நிற அட்டைகள் பொருத்தப்படுகிறது.

சான்று நிலை விதைகளுக்கு நீல நிற அட்டை பொருத்தப்படுகிறது. ஆதார நிலை விதைகளாக சதவீதம் இனத்தூய்மை கொண்டவையாகவும் சான்று நிலை விதைகள் 98% இனத்தூய்மை கொண்டவையாகும் இருக்கும். தருமபுரி மாவட்டத்தில் விதை மற்றும் அங்ககச் சான்று துறையினால் சான்றளிப்பு செய்யப்பட்ட விதைகள் அரசு உற்பத்தியாளா்களால் விவசாயிகளின் நிலத்தில் விதைப் பண்ணைகள் அமைத்து, விதைகளை அரசே கொள்முதல் செய்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.