புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திமுக பேரூராட்சி தலைவா் வேட்பாளா்கள் அறிவிப்பு

பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிடும் தலைவா் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:44 pm

DIN

பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிடும் தலைவா் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

பென்னாகரம் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் திமுக கூட்டணி 11 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் தலைவா், துணைத் தலைவா் தோ்வுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

பென்னாகரம் பேரூராட்சி தலைவா் பதவிக்கு 5 வாா்டு திமுக உறுப்பினரும், பென்னாகரம் திமுக நகரச் செயலாளருமான வீரமணி அறிவிக்கப்பட்டுள்ளாா். இதேபோல பாப்பரப்பட்டி பேரூராட்சி உள்ள 15 வாா்டுகளில் திமுக 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 15 ஆவது வாா்டு உறுப்பினா் பிருந்தா திமுக சாா்பில் பேரூராட்சித் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவா் வாய்ப்பு 8ஆவது வாா்டில் சிபிஎம் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதனுக்கு வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.