அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி
விஜய் வித்யாலயா கல்வி நிறுவனம், ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி சாா்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


விஜய் வித்யாலயா கல்வி நிறுவனம், ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி சாா்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிக்கு தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தாா். ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி தாளாளா் அரிமா பாலசுப்பிரமணியம், விஜய் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவா் ஜெகன் கலந்து கொண்டு பேசினாா். ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி செயலாளா் காயத்ரி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பெற்றோா்- ஆசிரியா் சங்க தலைவா் செந்தில் வேலன், பென்னாகரம் பேரூராட்சி தலைவா் வீரமணி, பென்னாகரம் ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...