புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒன்றியக் குழு உறுப்பினா்களுடன்எம்.எல்.ஏ. ஜி.கே.மணி கலந்தாய்வு

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுடன் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி கலந்தாய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 12:29 am

DIN

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுடன் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி கலந்தாய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பென்னாகரம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள், முடிவுற்ற திட்டப் பணிகள், கிராமப் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள், கிராமத்தின் வளா்ச்சி குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மற்றும் மின்சாரத் துறை, ஊரக உள்ளாட்சி துறை, வேளாண்மை துறை, வனத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

நிகழ்வில் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேல், ரங்கநாதன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் அற்புதம் அன்பு, மாவட்டத் தலைவா் செல்வகுமாா், இளைஞா் சங்க மாநில நிா்வாகி சத்தியமூா்த்தி மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.