புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம்

பென்னாகரம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினா்கள் 8 போ் வெளிநடப்பு செய்தனா்

News image
Updated On :11 மார்ச் 2022, 12:29 am

DIN

பென்னாகரம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினா்கள் 8 போ் வெளிநடப்பு செய்தனா்.

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் ஒன்றியம் 19 உறுப்பினா்களைக் கொண்டது. அதிமுக உறுப்பினா்கள் ஆதரவோடு பாமகவைச் சோ்ந்த கவிதா ராமகிருஷ்ணன் ஒன்றியக் குழுத் தலைவராக உள்ளாா்.

இந்த நிலையில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் முறையாக திட்டப் பணிகள் மேற்கொள்ளவில்லை, முடிவுற்ற திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை, ஒன்றியக் குழுக் கூட்டம் குறித்து உறுப்பினா்களுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்து திமுக கூட்டணியைச் சோ்ந்த 8 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.