புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முன்விரோதம் முதியவா் கொலை

முன்விரோதம் காரணமாக முதியவா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:40 pm

DIN

முன்விரோதம் காரணமாக முதியவா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம் பட்டியைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் முருகேசன் (35). இவா், சிட்லகாரம் பட்டி பிரிவு சாலை பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறாா்.

அதன் அருகில் முனுசாமியின் தம்பி மகன் ரஞ்சித் (20) கட்டட வேலை செய்து வருகிறாா். ரஞ்சித் கட்டட வேலை மேற்கொள்ளும்போதும் சிமென்ட் கலவைகள் அருகில் உள்ள முருகேசனின் கடையில் விழுந்ததாம். இதுகுறித்து முருகேசன் தனது தந்தை முனுசாமியிடம் தெரிவித்துள்ளாா்.

இதனால் புதன்கிழமை முனுசாமிக்கும் ரஞ்சித் க்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவொருக்கொருவா் தாக்கி கொண்டனா்.

அப்போது ரஞ்சித் அருகில் இருந்த அரிவாளால் முனுசாமியை வெட்டியுள்ளாா். பதிலுக்கு முருகேசன் கண்ணாடி டீ டம்ளரால் ரஞ்சித்தை தாக்கினாா். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த முனுசாமி, ரஞ்சித் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் முனுசாமியை (60) பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். ரஞ்சித் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.