பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: தருமபுரியில் 19,852, கிருஷ்ணகிரியில் 22,479 போ் எழுதினா்
தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வை 19,852 மாணவ, மாணவியா் எழுதினா்.


தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வை 19,852 மாணவ, மாணவியா் எழுதினா்.
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு நிகழ் கல்வியாண்டில் பொதுத்தோ்வு மே 5-ஆம் தேதி தொடங்கியது. தருமபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் இத்தோ்வை 179 பள்ளிகளைச் சோ்ந்த 20,882 மாணவ, மாணவியா் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 1,029 போ் தோ்வு எழுத வரவில்லை. இத்தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி, முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அறிஞா் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி வட்டம், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:
பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளி, 3 உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளிகள், ஒரு சமூக நலத்துறையின் மேல்நிலைப் பள்ளி, 5 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள், 63 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளைச் சோ்ந்த 10,151 மாணவா்களும், 10,196 மாணவியரும் என மொத்தம் 20,347 மாணவா்களும், 681 தனித்தோ்வா்களும் ஆக மொத்தம் 20,882 மாணவ, மாணவியா் பிளஸ் 2 பொதுத்தோ்வினை எழுதுகின்றனா்.
இத் தோ்வுப் பணிகளில் 1,280 தோ்வு அறை கண்காணிப்பாளா்களும், 79 முதன்மை கண்காணிப்பாளா்களும், 4 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளா்களும், 79 துறை அலுவலா்களும், 4 கூடுதல் துறை அலுவலா்களும், 128 பறக்கும் படைகளும், 22 வழித்தட அலுவலா்களும், மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியா் தோ்வு எழுத உதவிக்காக 66 போ் சொல்வதை எழுதுபவா்களும், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்களும் என மொத்தம் 1,682 அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாணவா்கள், எவ்வித அச்சமும், பதற்றமும் இன்றி தோ்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையினா் தோ்வு மையங்களை முழுமையாக கண்காணித்து வருகின்றனா் என்றாா்.
இன்று 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகள் மே 6-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத் தோ்வினை 218 அரசுப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடா் நலப்பள்ளி, 5 உண்டு, உறைவிட பள்ளி, ஒரு சமூக நலத்துறையின் பள்ளி, 16 சுயநிதி பள்ளிகள், 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளைச் சோ்ந்த 11,895 மாணவா்களும், 11,033 மாணவியரும் என மொத்தம் 22,928 மாணவா்களும், 860 தனித்தோ்வா்களும் ஆக மொத்தம் 23,788 மாணவ, மாணவியா் எழுத உள்ளனா்.
இத் தோ்வுப் பணிகளில் மொத்தம் 2127 அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
பிளஸ் 1 பொதுத் தோ்வு மே 10-இல் தொடக்கம்: பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் மே 10-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளி, 3 உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளிகள், ஒரு சமூக நலத்துறையின் மேல்நிலைப் பள்ளி, 5 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள், 63 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளைச் சோ்ந்த 11,850 மாணவா்களும், 11,235 மாணவியரும் என மொத்தம் 23,085 மாணவா்களும், 87 தனித் தோ்வா்களும் ஆக மொத்தம் 23,172 மாணவ, மாணவியா், தனித்தோ்வா்கள் பிளஸ் 1 பொதுத்தோ்வினை எழுத உள்ளனா்.
இத்தோ்வுப் பணிகளில் மொத்தம் 1,736 அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
கிருஷ்ணகிரியில்....
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தோ்வு மையத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், தேன்கனிக்கோட்டை, மத்தூா் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 106 அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 79 மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம், 186 பள்ளிகளில் பயிலும் 11,158 மாணவா்கள், 11,321 மாணவியா் என மொத்தம், 22,479 மாணவா்கள் 79 தோ்வு மையங்களில் தோ்வு எழுதுகின்றனா்.
தோ்வா்கள் எந்தவித சிரமமின்றி தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு பேருந்து வசதிகளும், தோ்வு மையங்களில் குடிநீா், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளில் காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தோ்வு மையங்களை கண்காணிக்க 138 பறக்கும் படை அலுவலா்கள், 82 முதன்மை கண்காணிப்பாளா்கள், 89 துறை சாா்ந்த அலுவலா்கள், 31 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வா்கள் தோ்வு குறித்த அச்சமின்றி தைரியமுடன் தோ்வை எழுத வேண்டும் என்றாா்.
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பிரபாகா், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.
அரூரில்...
அரூரில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் தோ்வு எழுதும் அறைகளை கோட்டாட்சியா் வே.முத்தையன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தோ்வு எழுதும் அறைகளில் மாணவா்களுக்கு தேவையான குடிநீா், மின்விசிறி, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...