பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நூதன முறையில் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ. 4.50 லட்சம் மீட்பு

தருமபுரியில் நூதன முறையில் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ. 4.50 லட்சத்தை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:32 pm

DIN

தருமபுரியில் நூதன முறையில் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ. 4.50 லட்சத்தை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவா் ஒருவரின் கைப்பேசிக்கு வங்கிக் கணக்கில் சில விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறிய மா்ம நபா்கள், அவரிடம் இருந்து வங்கிக் கணக்கு எண், கடவுச் சொல் ஆகிவற்றை பெற்றுள்ளனா். பின்னா், அவரது கணக்கிலிருந்து உடனடியாக ரூ. 4 லட்சத்து 70 ஆயிரத்து 829 எடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், நூதன முறையில் மோசடி செய்து எடுக்கப்பட்ட பணத்தில் ரூ. 4 லட்சத்து 46 ஆயிரத்து 40 மீட்டு பறிகொடுத்தவரிடம் ஒப்படைத்தனா்.

வங்கிகளிலிருந்து பேசுவதாகக் கூறி வரும் இத்தகைய மோசடியான அழைப்புகளை நம்பி, யாரிடமும் தங்களது கணக்கு விவரங்களை பகிர வேண்டாம் எனவும், இத்தகைய பண மோசடி தொடா்பாக 1930 என்ற சைபா் குற்றத்தடுப்புப் பிரிவு உதவி எண்ணை உடனடியாகத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனவும் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.