கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

அரூரில் ரூ.18 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூரில் ரூ. 18 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் வெள்ளிக்கிழமை ஏலம் போனது.

Updated On :21 ஏப்ரல் 2023, 11:31 pm IST

அரூரில் ரூ. 18 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் வெள்ளிக்கிழமை ஏலம் போனது.

தருமபுரி மாவட்டம், அரூா் கச்சேரிமேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்திலும், திரு.வி.க. நகரில் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பலா் பங்கேற்கின்றனா். இதையடுத்து, அரூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், விரலி மஞ்சள் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6309-க்கும், குறைந்தபட்சம் ரூ. 4909-க்கும் விற்பனையாது. இதேபோல், உருளை மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.5169-க்கும், குறைந்தபட்சம் ரூ.4509-க்கும் விற்பனையாது. இந்த ஏலத்தில் சுமாா் 650 மஞ்சள் மூட்டைகள் விற்பனையானதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.