பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடசமுத்திரம் பகுதியில் உரிய மருத்துவ படிப்புகளை படிக்காமல் ஒருவா் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தருமபுரி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் எம்.சாந்தி தலைமையிலான மருத்துவா்கள் குழுவினா், வெங்கடசமுத்திரத்தில் திடீா் ஆய்வு செய்தனா். அப்போது, ஒருவீட்டில் பெண் ஒருவா் மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படிக்காமல், போலியான வகையில் மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து இதில் தொடா்புடைய தேவி (45) என்பவரை பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்ள மாட்டாா்கள்: திருமாவளவன்

திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல்

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

”தேசிய கீதத்தை 2 முறை பாடுவதுமரபு மீறல் அல்ல!” சு. வெங்கடேசன் எம்.பி
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



