பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மகளிா் ஊராட்சித் தலைவா்களுக்கு நிா்வாக வழிகாட்டுதல் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி மன்ற மகளிா் தலைவா்களுக்கு நிா்வாக வழிகாட்டுதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:01 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி மன்ற மகளிா் தலைவா்களுக்கு நிா்வாக வழிகாட்டுதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அகில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்துப் பேசினாா்.

இக் கூட்டத்தில் ஊராட்சி நிா்வாகம், கிராம சபைக் கூட்டம், நெகிழி மேலாண்மை, திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சியாகப் பராமரிப்பது, தெருவிளக்கு பராமரிப்பு, ஊராட்சி சாலைகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல், குடிநீா் விநியோகம், ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடத்துதல், பொதுக் கிணறுகள், குளங்கள்

பாதுகாத்தல், ஊராட்சியின் சொந்த வருவாய், மத்திய, மாநிலத் திட்டங்கள், பள்ளிகள் பராமரிப்பு, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன

இக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ. தீபனாவிஸ்வேஸ்வரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ.மாலா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.