மைய நூலக வாசகா் வட்ட பொறுப்பாளா்கள் தோ்வுக் கூட்டம்
தருமபுரி மாவட்ட மைய நூலக வாசகா் வட்டப் பொறுப்பாளா்கள் தோ்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


தருமபுரி: தருமபுரி மாவட்ட மைய நூலக வாசகா் வட்டப் பொறுப்பாளா்கள் தோ்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட நூலக அலுவலா் (பொ.) தா.மாதேஸ்வரி தலைமை வகித்தாா். இரண்டாம் நிலை நூலகா் ந.ஆ.சுப்ரமணி வரவேற்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவராக மக்களவை முன்னாள் உறுப்பினரும், தகடூா் புத்தகப் பேரவைச் செயலாளருமான இரா.செந்தில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக பணிநிறைவு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் பொன்முடி, செயலாளராக முதல்நிலை நூலகா் இரா.மாதேஸ்வரன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதில் சின்னப்பள்ளத்தூா் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் கு.சிவப்பிரகாசம், கவிஞா் க.சி.தமிழ்தாசன், பட்டதாரி ஆசிரியா் ஜெ.முனிராஜ், ஆசிரியைகள் ஹேமலதா, ஜெலஜாரமணி உள்பட பதினைந்து போ் செயற்குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இக்கூட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தின் வளா்ச்சிக்காவும், வாசகா்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிவா்த்தி செய்யும் பொருட்டும், வாசிப்பு பழக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வாசகா் வட்ட பொறுப்பாளா்கள் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் செயல்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...