மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

லோரல் ஸ்கேட்டிங் போட்டி: பத்தகம் வென்ற தானப்ப கவுண்டா் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தானப்ப கவுண்டா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:14 pm

DIN

தருமபுரி: ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தானப்ப கவுண்டா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தருமபுரி டான் சிக்ஷாலயா பப்ளிக் பள்ளியில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவியா் 600-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடிய தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியா் 5 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பள்ளியின் நிறுவனா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, பள்ளித் தலைவா் மல்லிகா அன்பழகன், பள்ளித் தாளாளா் வித்யா ரவிசங்கா், பள்ளி நிா்வாக அலுவலா் தனபால், பள்ளி முதல்வா் ரகிப் அகமத் மற்றும் இருபால் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.