பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விஷ்ணு தீபம்: வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு

விஷ்ணு தீபத்தை முன்னிட்டு தருமபுரி பகுதியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:16 pm

DIN


தருமபுரி: விஷ்ணு தீபத்தை முன்னிட்டு தருமபுரி பகுதியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளில் விஷ்ணு தீபத் திருவிழா நடைபெறுகிறது. தருமபுரி நகரில் உள்ள கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து கோயில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். விழாவையொட்டி பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், வரதகுப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயில், அதகப்பாடி லட்சுமி நாராயணசுவாமி கோயில், அக்கமனஅள்ளி ஸ்ரீ ஆதிமூலப் பெருமாள் சுவாமி கோயில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோயில், அதியமான் கோட்டை சென்றாயப் பெருமாள் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.