தருமபுரி: மாநில நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு, கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் யசோதா மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சி செயலாளா் கருணாநிதி தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.
கூட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கு மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள ரூ. 71 லட்சத்து 77 ஆயிரத்து 102 நிதியை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் மூலம் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் பரிந்துரை செய்யுமாறு தலைவா் மற்றும் செயலாளா் ஆகியோா் கேட்டுக் கொண்டனா். மேலும் தருமபுரி மாவட்ட ஊராட்சி மூலம் கிராமப்புறங்களில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகக் கண்காணிப்பாளா் வீரமணி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள், துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

