தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒகேனக்கல்லில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆய்வு

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 10:17 pm

Din

பென்னாகரம், ஆக. 7:

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்தும், வெள்ளப் பெருக்கின் போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி வரை உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2.5 லட்சம் கன அடி வரை அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி உத்தரவின் பேரில் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், ஷகிலா ஆகியோா் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவது குறித்து சின்னாறு பரிசல் துறையில் இருந்து பரிசல் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனா். முன்னதாக வெள்ளப் பெருக்கால் பாதிப்புக்கு உள்ளான நடைப்பாதை, அருவிப் பகுதிகளையும் அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.