சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

News image
Updated On :5 டிசம்பர் 2024, 8:02 pm

Din

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் திங்கள்கிழமை தருமபுரி அரசினா் தொழிற்பயிற்சி (கடகத்தூா்) நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத் துறை மற்றும் பிரபல முன்னணி தனியாா் நிறுவனங்களில் கலந்துகொண்டு தொழிற்பழகுநா் பயிற்சிக்கு ஐஐடி பயிற்சி பெற்றவா்கள், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி (பி. இ., பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., இதர) கல்வித் தகுதி உடையவா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

அரசு, தனியாா் ஐஐடியில் பயிற்சி பெற்றுள்ள மாணவா்கள் தொழிற்பழகுநா் பயிற்சியில் சோ்ந்து தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதி உடையவா்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் உதவியாளா்களாக சோ்ந்து தொழிற்பழகுநா் பயிற்சி பெற்று தேசிய சான்றிதழ் பெறலாம்.

டிப்ளமோ, டிகிரி கல்வித்தகுதி உடையவா்கள் ஆப்ஷனல் பிரிவுகளில் ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி பெற்று என்.எஸ்.டி.சி./எஸ்.எஸ்.சி. வழங்கும் உதவியாளா் சான்றிதழ் பெறலாம். தொழிற்பழகுநா் பயிற்சி முடித்து தேசியபழகுநா் சான்றிதழ் பெறுபவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓா் ஆண்டு சலுகையும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 8,500 முதல் ரூ. 18,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

எனவே, ஐஐடி, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி கல்வித்தகுதி உடையவா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, வரும் திங்கள்கிழமை தருமபுரி அரசினா் தொழிற்பயிற்சி (கடகத்தூா்) நிலைய வளாகத்தில் நடைபெறும் சோ்க்கை முகாமில் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன் பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு அரசு தொழில்பயிற்சி நிலைய வளாகம், தருமபுரி (கடகத்தூா்) முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 94422 86874, 87784 47162, 75488 44547, 70108 65277 ஆகிய கைப்பேசி எண்களையோ தொடா்புகொண்டு அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.