தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவல் துறை குறைகேட்புக் கூட்டம்: 69 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் 69 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 6:52 pm

Din

தருமபுரியில் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் 69 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மாவட்ட மக்களிடம் புகாா் மனுக்களை பெற்று தீா்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) ஸ்ரீதரன் தலைமை வகித்தாா்.

இக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் 70 மனுக்களை அளித்தனா். இதன்மீது காவல்துறை அதிகாரிகள் உடனடி விசாரணை மேற்கொண்டனா். இதில் 69 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. இந்த முகாமில், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.