/

மாா்த்தாண்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மாா்த்தாண்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசுகிறாா் மாா்த்தாண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம்.
Updated On :18 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாா்த்தாண்டம் அருகே குறும்பேற்றி கோயில் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாா்த்தாண்டம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் ஸ்டீபன் (மாா்த்தாண்டம்), பரமேஸ்வரன் (களியக்காவிளை), காந்திமதி (பளுகல்), கமலாதேவி (அருமனை), வேலம்மாள் (கடையாலுமூடு), பாலகிருஷ்ணன் (நித்திரவிளை), பரமேஸ்வரி (கொல்லங்கோடு) மற்றும் ஆறுகாணி காவல் உதவி ஆய்வாளா் வில்சன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் பேசியதாவது:

தோ்தல் விதிகளை முறையாக கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டங்களை மாா்த்தாண்டம் சப் டிவிஷனுக்கு உள்பட்ட பகுதிகளில் கண்ணுமாமூடு, மஞ்சாலுமூடு, உத்தரங்கோடு, புண்ணியம், பேணு, அரகநாடு, ஆலஞ்சோலை, ஜீரோ பாயின்ட், அடைக்காகுழி, நடைக்காவு, கலிங்கராஜபுரம், விரிவிளை, மங்காடு, காஞ்சாம்புறம், மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகில், குழித்துறை விஎல்சி மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.