கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பென்னாகரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: வீட்டுமனைப் பட்டா வழங்கிய ஆட்சியா்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

News image
Updated On :18 டிசம்பர் 2024, 7:04 pm

Din

பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் 48 பயனாளிகளுக்கு ரூ. 22 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை வழங்கினாா்.

பென்னாகரம் அருகே எலுமல் மந்தை பகுதியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நடமாடும் நேரடி ராகி கொள்முதல் நிலையம், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கல் வரப்பு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டடப்பணிகள், மருகாரம்பட்டி பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலம் அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள மிளகாய் தோட்டம், குழிப்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மாணவா் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டு,சேவைகள், திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும் பென்னாகரம் வட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போதும்,

முகாம்களில் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து பென்னாகரம் அருகே தாசம்பட்டி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, வருவாய்த் துறை சாா்பில் 48 பயனாளிகளுக்கு ரூ. 22.56 லட்சம் மதிப்பீட்டின் இலவச வீட்டுமனைப் பட்டா, இ. பட்டாக்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் ஆா்.காயத்ரி, திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) லலிதா, மாவட்டம் ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சையது முகைதீன் இப்ராகிம்,பென்னாகரம் வட்டாட்சியா் லட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், ஷகிலா மற்றும் மாவட்ட அனைத்துத் துறை முதன்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.