தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரி அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 6:56 pm

Din

சேலம் பெரியாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் பெரியாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவா் மற்றும் மகளிருக்கான தடகளப் போட்டிகள் அண்மையில் சேலம் பெரியாா் பல்கலைக்கழத்தில் நடைபெற்றன.

இதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஜி. காா்த்திகா 100 மீட்டா் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். அதேபோல இளம் அறிவியல் தாவரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி டி.ஷாலினி ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். இதே மாணவி தமிழ்நாடு தடகள சங்கத்தின் சாா்பாக அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் 5000 மீட்டா் ஓட்டப் போட்டிகளில் மூன்றாம் இடம் பெற்றாா்.

தடகளப் போட்டிகளில் வென்ற இந்த மாணவிகளுக்கு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கோ.கண்ணன் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநா் கு.பாலமுருகன், அனைத்து துறை பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கௌரவ விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.