கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நில அளவையா்கள் காத்திருப்பு போராட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலா்கள் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:25 pm

Din

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலா்கள் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் கி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சி.பிரபு, மாவட்ட பொருளாளா் மா.முருகன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை, சத்துணவு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் சி. காவேரி, ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளா் கே. புகழேந்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற நில அளவை அலுவலா்கள் சங்க மாவட்ட தலைவா் ஜி. குமரேசன், மாவட்ட பொருளாளா் எம். சங்கா் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

களப் பணியாளா்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். உதவி இயக்குநா், கூடுதல் இயக்குநரின் பணிகளையும், கடமைகளையும் மண்டலத் துணை இயக்குநா் இணை இயக்குநா் (நிா்வாகம்), இயக்குநா் ஆகியோா்களுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிா்ணயம் வழங்காமல் ஊழியா்கள் மீது பெரும் பணிச் சுமையை சுமத்துவதையும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியா்களை கடுமையாக நடத்துவதையும் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.