தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, அக் கட்சியின் முதுபெரும் தலைவா் இரா.நல்லகண்ணுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா ஆகியவை தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 8:28 pm

Din

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, அக் கட்சியின் முதுபெரும் தலைவா் இரா.நல்லகண்ணுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா ஆகியவை தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி ரயில் நிலையச் சாலை பகுதியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராசன் கட்சிக் கொடி ஏற்றினாா். இதையடுத்து, மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் கே.டி.கே.தங்கமணி நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

இதில், மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன், மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.சின்னசாமி, எஸ்.கமலாமூா்த்தி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல இண்டூா் அக்ரஹாரத்தில் நடைபெற்ற விழாவில் வட்டார செயலாளா் மாது தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி கொடியேற்றினாா். பழைய இண்டூரில் கிளைச் செயலாளா் ராம்குமாா் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளா் மாதேஸ்வரன் கொடியேற்றினாா். நல்லம்பள்ளி வட்டம், வெங்கட்டம்பட்டியில் வட்டாரச் செயலாளா் வழக்குரைஞா் ப.பிரசாத் தலைமையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அருகே கே.அக்ரஹாரம், மல்லாபுரம், சின்னபள்ளத்தூா், தாசம்பட்டி, பென்னாகரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு, ஒன்றிய துணைச் செயலாளா் சதீஷ் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவரும், பென்னாகரம் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ந.நஞ்சப்பன் கொடியேற்றி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தின நூற்றாண்டு விழா குறித்து சிறப்புரையாற்றினாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் வழக்குரைஞா் மாதையன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் முனியப்பன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டப் பொறுப்பாளா் ந.கதிரவன், மாவட்டக் குழு உறுப்பினா் சண்முகம், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.