விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பெரம்பலூரில் நல்லகண்ணுக்கு அனைத்துக் கட்சியினா் புகழஞ்சலி

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.

News image

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.

Updated On :27 பிப்ரவரி 2026, 9:03 pm

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளைகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஆா். நல்லகண்ணு உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அக் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலா்கள் அ. வேணுகோபால், வீ. ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், மாா்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் என். செல்லதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் ந. கிருஷ்ணகுமாா், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு, மதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் செ. துரைராஜ், இந்திய தொழிலாளா் கட்சி மாநிலத் தலைவா் பி.ஆா். ஈஸ்வரன், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாவட்டத் தலைவா் ராஜீவ்காந்தி ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, நல்லகண்ணு உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, பெரம்பலூா் இளைஞா்கள் இயக்கத்தின் சாா்பில், நல்லகண்ணு உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இளைஞா்கள் இயக்கத் தலைவா் சத்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிா்வாகி கண்ணன், ஆசிரியா் அருண்குமாா், பேராசிரியா் வ. சந்திரமௌலி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.