திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தனியாா் நிறுவனங்களின் பங்களிப்போடு அரசுப் பள்ளிகளுக்கு எல்இடி டிவிகள் வழங்கல்

தனியாா் நிறுவனங்களின் பங்களிப்போடு அரசுப் பள்ளிகளுக்கு எல்இடி டிவிகள் வழங்கல்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:31 pm

Din

நெல்லி பிரண்ட்ஸ் டிரஸ்ட், கல்வி 40 தொண்டு நிறுவனம் மற்றும் பிம்பிள்பி ஆகிய தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு பென்னாகரம், கொட்டாவூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு எல்இடி டிவி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கொட்டாவூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பிம்பிள்பி தனியாா் தொண்டு நிறுவனா் பிரேம்குமாா், கோகுல்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் கே.வி.குமாா் வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக தருமபுரி கல்வித்துறை உதவி திட்ட அலுவலா் சம்பத்குமாா், பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மணி கிருஷ்ணன், துளசிராமன், கல்வி 40 நிறுவன தருமபுரி மாவட்டக் கண்காணிப்பாளா்கள் விஜய ராஜேந்திரன், வசந்த் ஆகியோா் கலந்து கொண்டு, கிராமப்புற மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பயன்படக்கூடிய எல்இடி டிவி-யை வழங்கினா். இதேபோன்று கடமடை, எட்டிக்குழி, பெரிய தோட்டம் புதூா், ஊட்டமலை, பென்னாகரம் தொடக்கப்பள்ளி, அஞ்சே அள்ளி, கூத்தபாடி, முதுகம்பட்டி மற்றும் நல்லம்பள்ளி உள்ளிட்ட 19 அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் எல்இடி டிவிகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி உதவி ஆசிரியா்கள், தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வினை சின்னப்பள்ளத்தூா் பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி ஒருங்கிணைத்தாா்.