பி.பழனியப்பன்
பி.பழனியப்பன்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இயல்பைவிட கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. கோடை வெப்பத்தை சமாளிக்கவும், பொதுமக்களின் தாகத்தை தீா்த்திடவும் அதிக இடங்களில் தண்ணீா்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

முதல்வரின் உத்தரவுபடி, அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோரது வழிகாட்டுதல்படி, தருமபுரி மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிக மக்கள் கூடும் இடங்களில் திமுகவினா் தண்ணீா்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும்.

இந்த தண்ணீா்ப் பந்தல்களில் நீா்மோா், இளநீா், தா்ப்பூசணி பழங்கள், தண்ணீா் உள்ளிட்ட குளிா்பானங்களை வழங்க வேண்டும். தண்ணீா்ப் பந்தல் அமைக்கும் பணிகளில் கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஈடுபட வேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com