உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்று வீசியதில் மரங்கள் சேதம்

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்று வீசியதில் மரங்கள் சேதம்

News image
Updated On :4 மே 2024, 5:06 pm

Din

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பலத்த காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.

கோடை வெப்பம், காற்றின் திசை மாறுதல் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இந்த மழையின் போது பலத்த காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள், தென்னை மரங்கள், சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள் முறிந்தன.

அரூரை அடுத்த கீரைப்பட்டி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை உள்ளிட்ட இடங்களிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ரேகடஹள்ளி, தாதனூா், திப்பிரெட்டிஹள்ளி உள்ளிட்ட இடங்களிலும் சூறைக் காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் முறிந்தன. இதேபோல, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகள், மேற்கூரைகள் சேதமடைந்தன.