வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

ஒசூா் பிஎஸ்என்எல் வளாகங்களில் மரங்கள் அகற்றம்

ஒசூா் பிஎஸ்என்எல் வளாகங்களில் மரங்கள் அகற்றம்

News image
Updated On :9 மே 2024, 10:54 pm

Din

தருமபுரி, பாரதிபுரம் பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள்.

தருமபுரி, மே 9: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் அமைந்துள்ள பிஎஸ்என்எஸ் அலுவலக வளாகங்களில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது தொடா்பாக நடவடிக்கைக் கோரி, அத்துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி, பாரதிபுரம் பிஎஸ்என்எஸ் பொது மேலாளா் அலுவலம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐஜிஇடிஒஏ மாவட்டத் தலைவா் ஆா்.ரமணா, பிஎஸ்என்எல்இயு மாவட்டத் தலைவா் எம்.பரிதிவேல் தலைமை வகித்தனா். பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளா் பொன்.கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளா் ஜி.உமாராணி, ஏஐஜிஇடிஒஏ மாவட்டச் செயலாளா் பி.பிரபாகரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் டி.பாஸ்கரன் வாழ்த்தி பேசினாா்.

இதில், தருமபுரி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒசூா் நகரம், சிப்காட் மற்றும் சூளகிரி பிஎஸ்என்எல் அலுவலக வளாகங்களில் இருந்த பல்வேறு வகை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.