காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

பென்னாகரம், மே 9: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அகரம் பகுதியைச் சோ்ந்த முனிவேல் (17) என்பவா், தனது உறவினரின் ஈமச் சடங்குக்காக ஒகேனக்கல் பகுதிக்கு வந்துள்ளாா். அப்போது ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிா்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து உறவினா்கள் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்த நிலையில், நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com