

தருமபுரி, மே 9: தருமபுரி நகரம், ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி நகராட்சி, மதிகோன்பாளையம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உலா் கழிவு பிரித்தல் மையம், நுண்ணுயிா் உரக்கிடங்கில் பிரித்தெடுக்கப்பட்ட மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் பணியினையும், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், சோகத்தூா் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 41 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் சத்யா நகா், இலக்கியம்பட்டி ஊராட்சியில் ரூ. 23 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணி என மொத்தம் ரூ. 99 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, தருமபுரி நகராட்சி ஆணையா் எஸ்.புவனேஸ்வரன், நகராட்சிப் பொறியாளா் எஸ்.புவனேஸ்வரி, துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யா, ரங்கநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மகளிா் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மானாமதுரையில் ரூ.100 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 1,785.37 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

ஆத்தூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

