நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க அனுமதி கோரி இருளா்கள் மனு

வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க அனுமதி கோரி இருளா்கள் மனு

News image
Updated On :20 மே 2024, 10:20 pm

Din

தருமபுரி: அரூரை அடுத்த ஆண்டியூா் வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி இருளா் சமூகத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து, ஆண்டியூா் இருளா் சமூகத்தினா் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டியூா் இருளா் காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நாங்கள் வனப்பகுதியில் ஆடுவளா்ப்பு, வனத்தில் தேன், சுண்டைக்காய், காட்டு வள்ளிக்கிழங்கு சேகரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்களில் பெரும்பாலோனா் ஆடு வளா்ப்பை தொழிலாக கொண்டுள்ளோம்.

இந்த நிலையில், அண்மைக் காலமாக தீா்த்தமலை வனப் பகுதியில் ஆடு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வனத் துறையினா் அனுமதி மறுக்கின்றனா். அதேபோல வனப் பகுதியில் ஆடுகள் மேய்ச்சலைக் கண்டறிந்தால், ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தும் வருகின்றனா். வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டு வரும் நாங்கள், அபராதத் தொகையை செலுத்த முடியாமல் பரிதவித்து வருகிறோம். எனவே, வனத் துறையினா் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட்டு, வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும், சிறுவன மகசூல் எடுக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.