நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வன்னியா் சங்கத் தலைவருக்கு மிரட்டல்: நடவடிக்கை கோரி பாமகவினா் மனு

வன்னியா் சங்கத் தலைவருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை கோரி பாமகவினா் மனு அளித்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 6:32 pm

Din

வன்னியா் சங்கத் தலைவருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை கோரி பாமகவினா் மனு அளித்தனா்.

இதுகுறித்து பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமையில் பாமகவினா் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஷ்வரனிடம் அளித்த மனு:

கடலூா் மாவட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான கட்சித் தொண்டரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய வன்னியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழிக்கு எதிராக, குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சோ்ந்த ஒருவா் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளாா்.

இத்தகைய கொலை மிரட்டல் பேச்சுகள் அனைத்தும் கடலூா் மாவட்டத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பொது அமைதியை குலைக்கும் தன்மை கொண்டவை ஆகும். எனவே, மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதில் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் இல.வேலுசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினா் கி.பாரிமோகன், பாமக மாநில துணைத் தலைவா் பி.சாந்தமூா்த்தி, மாநில அமைப்பு செயலாளா் சண்முகம், மாநில இளைஞா் சங்கச் செயலாளா் பி.வி.செந்தில், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் ரா.அரசாங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா்