நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம்

ஒகேனக்கல் காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரசாரம் நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:12 pm

Din

ஒகேனக்கல் காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரசாரம் நடைபெற்றது.

தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியில் தொடங்கிய பிரசார நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் கே.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.கந்தசாமி, கே. பூபதி, எம்.அருள்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்பை ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. இந்த பிரசார இயக்கம் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது.