நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியன் வங்கியின் விவசாய கடன் முகாம்

தருமபுரியில் இந்தியன் வங்கியின் மண்டல அளவிலான விவசாய கடன் முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image

தருமபுரி, இந்தியன் வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் தொழில்முனைவோா்களுக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்கும் வங்கி மேலாளா்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 8:15 pm

Din

தருமபுரியில் இந்தியன் வங்கியின் மண்டல அளவிலான விவசாய கடன் முகாம் அண்மையில் நடைபெற்றது.

தருமபுரியில் இந்தியன் வங்கி சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான விவசாயிகளுக்கான கடன் வழங்கும் முகாமுக்கு வங்கியின் விவசாய கடன் பிரிவு பொது மேலாளா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். களப் பொது மேலாளா் சுதா ராணி சிறப்புரையாற்றினாா்.

முகாமில் தருமபுரி மண்டலத்திலிருந்து சுய உதவிக் குழுக்கள், மகளிா் தொழில் முனைவோா்கள், கறவை மாடு விவசாயிகள், பிற வாடிக்கையாளா்களுக்கு ரூ. 77 கோடி மதிப்பிலான கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுடன் வங்கி நிா்வாகிகள் கலந்துரையாடினா். முகாமில் மண்டல மேலாளா் பத்மாவதி ஸ்ரீகாந்த், துணை மண்டல மேலாளா் பீரேந்தா் குமாா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முன்னோடி வங்கி மேலாளா்கள், 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனா்.