புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து, பட்டதாரி ஆசிரியா்கள் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:24 pm

Din

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து, பட்டதாரி ஆசிரியா்கள் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஜ.ஜோதி சந்திரா பணியாற்றி வருகிறாா். இவா், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது அங்குள்ள சில ஆசிரியா்களை அழைத்து ஒருமையில் கண்டிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.

இதைக் கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் தொடா்ந்து நீடித்து வருகிறது.