புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதல்வா் மருந்தகங்கள்: இணையத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தருமபுரி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 8:26 pm

Din

தருமபுரி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் கு.த.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் கடந்த சுதந்திர தின விழா உரையில், ‘பொதுப்பெயா்’ (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்கட்டமாக ஆயிரம் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தாா்.

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள ஆ.டட்ஹழ்ம்/ஈ.டட்ஹழ்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில்முனைவோா் நவ. 20-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் நலன்கருதி நவ. 30-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.