நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட தருமபுரி மாவட்ட ஆட்சியா் அறிவுரை

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:10 pm

Din

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலியானது, தற்காலிக செவிட்டுத் தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாகவும், விபத்தின்றியும் கொண்டாடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட காலம் கடந்து கண்டிப்பாக பட்டாசு வெடிக்கக் கூடாது. ஒலியின் அளவு 125 டெசிபல் அல்லது அதற்கு மேல் ஒலி எழுப்பக் கூடிய ஹைட்ரஜன் பாம், புல்லட் பாம், சரவெடி போன்ற பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

உச்சநீதிமன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை மக்கள் வாங்கக் கூடாது. பட்டாசுகளை வெடிக்க வைக்கும் போது கொளுத்தி தூக்கியெறிந்து விளையாடக் கூடாது. குடிசை, மாடிக் கட்டடங்கள் அருகில் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது. ஈரமுள்ள பட்டாசுகளை சமையல் அறையில் வைத்து உலா்த்தக் கூடாது. பட்டாசுகளை வெடிக்க வைப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி உபயோகிக்க வேண்டும்.

கம்பி மத்தாப்பு போன்ற பட்டாசுகளை கொளுத்தி முடித்த பின்னா், அவற்றை நீா்வாளியில் போட்டுவிட வேண்டும். தீக்காயம் ஏற்படும் பட்சத்தில் காயத்தின் மீது தண்ணீா் ஊற்ற வேண்டும் (சுமாா் 5 நிமிடங்கள்). பின்னா் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

பட்டாசு புகை சுற்றுச்சூழலையும், காற்று மண்டலத்தையும் மாசுபடுத்தும். மாசு பாதிப்பு குறைய நீண்டகாலமாகும். எனவே ஒலி மாசை கருத்தில் கொண்டு பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். தீ விபத்துகள் நிகழ்ந்தாலோ, விதிமீறல்களோ அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077, 108, 1800 425 7016, 1800 425 1071, 8903 891 077 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றாா்.