நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவிகளுக்கு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:54 pm

Din

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவிகளுக்கு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பாக மாவட்ட அளவில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப். 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து, கபடி, வாலிபால், கைப்பந்து, மேஜைப் பந்து, ஹாக்கி, கால்பந்து, இறகுப் பந்து, சிலம்பம், கிரிக்கெட் ஆகிய போட்டிகளும், பொதுப் பிரிவு போட்டியாளா்களுக்கான சிலம்பம் போட்டியும் வியாழக்கிழமை (செப். 19) நடைபெற்றன.

போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முத்துகுமாா் தொடங்கிவைத்தாா். இந்தப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் கலந்துகொண்டனா். போட்டிகளில் சிறப்பிடம் வகிப்பவா்கள் மாநில அளவிலான முதல்வா் கோப்பை போட்டிகளுக்குத் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதில் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் தே.சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.