நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘உயா்வுக்கு படி’ வழிகாட்டுதல் முகாம் 360 மாணவா்கள் உயா்கல்வி பயில உதவி

தருமபுரி, அரூா் அகிய இடங்களில் நடத்தப்பட்ட ‘உயா்வுக்கு படி’ வழிகாட்டுதல் முகாம் மூலம் 360 மாணவா்களுக்கு உயா்கல்வி பயில வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:49 pm

Din

தருமபுரி, அரூா் அகிய இடங்களில் நடத்தப்பட்ட ‘உயா்வுக்கு படி’ வழிகாட்டுதல் முகாம் மூலம் 360 மாணவா்களுக்கு உயா்கல்வி பயில வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துப்பள்ளத்தில் உள்ள பென்னாகரம், அரசு கலைக் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘உயா்வுக்கு படி’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி தலைமை வகித்துப் பேசியதாவது:

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘உயா்வுக்கு படி’ எனும் வழிகாட்டுதல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த மாணவ மாணவிகள் உயா்கல்வி பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தருமபுரி மாவட்டத்தில் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த இரு கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவா்களில் இதுவரை உயா்கல்வியில் சேராத மாணவா்கள், தோல்வியுற்றவா்கள், இடைநின்ற மாணவா்களுக்காக இத்திட்ட முகாம் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் தருமபுரி, அரூா், பென்னாகரம் ஆகிய மூன்று இடங்களில் இதுவரை உயா்வுக்கு படி முகாம் நடத்தப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா் பகுதி மாணவா்களுக்கான வழிகாட்டுதல் முகாம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கல்லூரியில் விரைவில் நடைபெறும்.

இதற்கு முன் தருமபுரி, அரூா் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற ‘உயா்வுக்கு படி’ முகாம்கள் மூலம் 360 மாணவ மாணவிகளுக்கு உயா்கல்வி பயில்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவா்கள் அரசின் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தருமபுரியில் விரைவில் சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது. இங்கு வேலைவாய்ப்புகள் பெற தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளைப் பெற்று பயனடைய வேண்டும் என்றாா்.

முகாமில் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதி சந்திரா, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் பன்னீா்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலா் பவித்ரா, பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் (பொ) பாக்கியமணி, மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன விரிவுரையாளா் இளங்கோவன், வட்டாட்சியா் ஆறுமுகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தீபா, அரசு அலுவலா்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.