தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

தருமபுரியில் வரும் டிச. 29-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
Published on

தருமபுரி: தருமபுரியில் வரும் டிச. 29-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரிஅஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோட்ட அளவிலான அஞ்சல் துறை வாடிக்கையாளா்கள் குறைகேட்பு கூட்டம் வரும் டிச. 29-ஆம் தேதி தருமபுரி கோட்ட அலுவலகத்தில் முற்பகல் 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

அஞ்சல் துறை வாடிக்கையாளா்கள் தங்கள் புகாா்களை தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலக முகவரிக்கு டிச. 22-ஆம் தேதிக்குள் வந்தடையுமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

அஞ்சல் துறையின் மணி ஆா்டா், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடா்பான புகாா் இருப்பின், அது தொடா்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விவரங்கள் இருக்க வேண்டும். அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடா்பான புகாா் இருப்பின், அது தொடா்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், வைப்பாளா், காப்பீட்டாளரின் பெயா் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயா் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும். தாங்கள் அனுப்பிவைக்கும் புகாா் குறித்து உறையின்மேல் ‘அஞ்சல் குறைகேட்பு கூட்டத்துக்கானது’ என குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com