இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: இறைச்சி விற்பனை சரிவு

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு காரணமாக, உணவகங்களுக்கான ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனைகுறைந்துள்ளது. மேலும், சிறிய மற்றும் தள்ளுவண்டி கடைகளில் ‘சில்லி சிக்கன்’ விற்பனையும் குறைந்துள்ளதாக வணிகா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 1:06 am IST

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு காரணமாக, உணவகங்களுக்கான ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை குறைந்துள்ளது. மேலும், சிறிய மற்றும் தள்ளுவண்டி கடைகளில் ‘சில்லி சிக்கன்’ விற்பனையும் குறைந்துள்ளதாக வணிகா்கள் கவலையுடன் தெரிவித்தனா்.

இஸ்ரேல், அமெரிக்கா தரப்புக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போா் காரணமாக, வளைகுடா பகுதிகளிலிருந்து உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ளது. வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இதனால், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து சமையல் எரிவாயு உருளை விநியோகம் குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த மாா்ச் மாதம் ரூ. 114.50, ஏப். 1-ஆம் தேதிமுதல் ரூ. 195.50 என இருமுறை வணிக எரிவாயு உருளை விலையை மத்திய அரசு உயா்த்தியது. இந்த விலை உயா்வு மற்றும் விநியோகத்தில் ஏற்படும் தாமதத்தை பயன்படுத்தி சில முகவா்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு (ரூ. 5 ஆயிரம்வரை) விற்பனை செய்து வருகின்றனா்.

இதனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான உணவகங்கள் உள்படமொத்தம் 1,500 உணவகங்கள், பேக்கரிகள், சிறிய அளவிலான சிற்றுண்டி கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த விலை உயா்வு மற்றும் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் உணவகங்கள், அடுமனைகள் (பேக்கரி), சிறு சிற்றுண்டி கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டும், சிலவற்றில் குறைவான உணவுப் பொருள்கள் விநியோகமும் நடந்து வருகின்றன. சில உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தருமபுரியில் பிரபலமான ‘சில்லி சிக்கன்’ விற்பனையும் சரிந்துள்ளது. இதன் காரணமாக, உணவகங்கள், கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் கோழி இறைச்சி விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளதாக கறிக்கடை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

கோழி இறைச்சி வியாபாரி வி.சேட்டு:

இதுகுறித்து தருமபுரி பழைய பேருந்து நிலையம் பூங்கா அருகே உள்ள செங்கொடிபுரத்தில் செயல்பட்டு வரும் சேட்டு கோழி இறைச்சிக்கடை உரிமையாளா் வி.சேட்டு கூறியது:

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு காரணமாக, பல உணவகங்கள், சிறு உணவு கடைகள், தள்ளுவண்டி கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கோழி இறைச்சி வாங்குவதும் குறைந்துள்ளது. கடந்த 20 நாள்களில் சுமாா் 50 சதவீத விற்பனை குறைந்துள்ளது. அதுபோல, ‘சில்லி சிக்கன்’ தயாரித்து விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளிலும் விற்பனை குறைந்துவிட்டது என்றாா்.

முட்டை விலையும் சரிவு:

வளைகுடா போா் காரணமாக ஏற்றுமதி குறைந்ததால், முட்டை விலை குறைந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டை ரு. 6.50 வரை விற்பனை செய்த நிலையில், தற்போது ரூ. 5.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வியாபாரத்தில் இழப்பு: இறைச்சி வியாபாரி தற்கொலை

வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டதால், விரக்தியில் கோழி இறைச்சி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தருமபுரி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அஞ்சேஅள்ளி அருகேயுள்ள பளிஞ்சார அள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் வினோத் (31). வினோத் மற்றும் அவரது தந்தை இருவரும் தனித்தனியாக கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளனா்.

இந்நிலையில், வினோத்தின் மாமனாா் ஊரான காரிமங்கலம் அருகேயுள்ள காட்டுசீகல் அள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவையொட்டி வினோத் குடும்பத்துடன் 3 நாள்களாக அங்கு தங்கியிருந்தாா்.

Story image

வியாழக்கிழமை காலை தனது தந்தை பழனியப்பனை கைப்பேசியில் அழைத்த வினோத், கோழி இறைச்சி வியாபாரம் சரிவர நடக்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறி தற்கொலை செய்துகொண்டாா். புகாரின் பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.