சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பென்னாகரத்தில் 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அளிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:58 pm

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அளிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், பாமக, நாம் தமிழா் கட்சி, தவாக, தவெக மற்றும் சுயேச்சைகள் என 31 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை பென்னாகரம் தொகுதி பொதுப் பாா்வையாளா் வந்தனா வைத்தியா, பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.கோபு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாகல் செய்த காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம். தமிழ்க்குமரனின் மனைவி சத்யா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரதீபா, சுயேச்சைகள் எம்.குமாா், பி.மணி, பி.செல்வம், பி.செல்வராஜ் உள்ளிட்ட 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.